மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

ரஜினி மன்றம்: உறுப்பினராவது எப்படி?

ரஜினி மன்றம்: உறுப்பினராவது எப்படி?

அரசியல் கட்சித் தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், ரஜினி மன்றத்தில் உறுப்பினராவது எப்படி என்பது குறித்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்கள் மத்தியில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். அதோடு வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்ற தகவலையும் கூறினார். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை வரவழைத்துள்ள நிலையில், மீண்டும் போயஸ் கார்டனிலிருந்து ஒரு முதல்வர் என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில், நேற்று புத்தாண்டை முன்னிட்டு தனது போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கட்சி அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாளே ரஜினி மன்றம் என்ற பெயரில் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார். இணையதளப் பக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். உறுப்பினராவதற்கான வழிமுறையும் நேற்று (ஜனவரி 1) அறிக்கை வாயிலாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

அதில், “பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களும், பதிவு செய்யப்படாத மன்றத்தின் உறுப்பினர்களும் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் மக்களை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவரும்பொருட்டு rajinimandram.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், உங்கள் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள எண்ணைப் (VOTER ID NUMBER) பதிவு செய்து, உறுப்பினர் ஆகுங்கள். தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவோம். வாழ்க தமிழக மக்கள். வளர்க தமிழ்நாடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 2 ஜன 2018