மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கத் தயார்!

நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கத் தயார்!

‘எங்களுக்குப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் உள்ளதால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவந்தால் அதைச் சந்திக்கத் தயார்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்த நிலையில், அதிமுக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டுமென திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தன்னால் தலையிட முடியாது என்று ஆளுநர் கூறியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஆளுநரிடம் மனு அளித்த அதிமுக எம்.எல்.ஏக்களைச் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வரும் 8ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ளது.

இந்த நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையில் நேற்று (ஜனவரி 1) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டாலினாக இருந்தாலும் சரி, தினகரனாக இருந்தாலும் சரி... அதிமுக அரசை வீழ்த்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் எந்த வகையிலும் ஈடேறாது. பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களை நாங்கள் கொண்டிருக்கும்போது நாங்கள் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவந்தால் அதைச் சந்திக்கத் தயாராக உள்ளோம். அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து அதிமுக ஆட்சியை வழிநடத்திச் செல்வோம். ஸ்டாலின் கூறுவதுபோல இது குதிரை பேர அரசு அல்ல, குதிரை வேகத்தில் செயல்படும் அரசு” என்று தெரிவித்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 2 ஜன 2018