மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

மத்திய அரசுக்கு எதிர்ப்பு : மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

மத்திய அரசுக்கு எதிர்ப்பு : மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

மத்திய அரசு கொண்டுவரும் தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 2) மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

1934 ஆம் ஆண்டு, மருத்துவக் கல்வியை ஒழுங்கு முறைப்படுத்தவும், மருத்துவப் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கவும் இந்திய மருத்துவக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் ஊழல் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, அதைச் சீர்திருத்தவும்,முழுமையாக மருத்துவ சுற்றுச்சூழலை சரிசெய்யும் வகையிலும் இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்து விட்டு அதற்குப் பதிலாகத் தேசிய மருத்துவ ஆணையம் என்கிற அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது.

அதன்படி தேசிய மருத்துவ ஆணையம் மசோதா டிசம்பர் 29 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த புதிய ஆணையத்தின் மூலம் 4 தன்னாட்சி வாரியங்களை அமைத்து இளங்கலை, முதுகலைப் பாடத்திட்டம், கல்வி நிறுவன மதிப்பீடு மற்றும் அங்கீகாரம், மருத்துவர்களாகப் பணிபுரியப் பதிவு செய்தல் ஆகியவற்றைக் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவப் பட்டதாரிகளுக்குத் தகுதித் தேர்வு நடத்தப்படும். தேர்ச்சி பெற்றவர்களே மருத்துவராகப் பணியாற்ற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்தத் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனை இந்திய மருத்துவ சங்க தேர்வு தலைவர் சி.என்.ராஜா தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018