மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

புது வருடத்தில், புது சென்சார் சர்ச்சை!

புது வருடத்தில், புது சென்சார் சர்ச்சை!

2017ஆம் ஆண்டு முழுவதும் இந்தியத் திரையுலகத்துக்கும் சென்சார் அதிகாரிகளுக்கும் இடையேயான பஞ்சாயத்து தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வந்தது. இதற்கு 2018ஆம் ஆண்டும் விதிவிலக்காக இருக்காது என்றே தோன்றுகிறது. வருடத்தின் முதல் நாளிலேயே இந்தப் பிரச்னை திருவனந்தபுரத்தில் தொடங்கியிருக்கிறது. 21 Months of Hell என்ற மலையாள ஆவணப்படத்துக்கு சென்சார் செய்ய முடியாது என்று மறுத்திருக்கிறது சென்சார் குழு.

78 நிமிடங்கள் உருவாகியிருக்கும் ‘21 Months of Hell' ஆவணப்படத்தை யடு விஜயகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இந்திய நாட்டில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள், சிறையில் அனுபவித்த பல கொடுமையான தண்டனைகளைப் பற்றிய தொகுப்பாக 21 Months of Hell உருவாகியிருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் நேரடி அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கும் இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தண்டனைகள்தான் இங்கு பிரச்சினை.

தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த செப்டம்பர் மாதம் 21 Months of Hell ஆவணப்படத்தின் திரையிடலை நடத்தியிருக்கிறார் யடு விஜயகிருஷ்ணன். ஆனால், இதுவரையில் சென்சார் வழங்கப்படாதது குறித்து நேற்று விசாரித்தபோது சென்சார் குழுவின் தரப்பில் ‘திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கொடுமையான தண்டனைகள் குறித்த அதிகாரபூர்வமான ஆதாரங்கள் இல்லை. இந்த தண்டனைகள் செயல்படுத்தப்பட்டதற்கான எவ்வித ஆவணமும் அரசாங்கத்திடம் இல்லை’ என்று கூறியிருக்கிறது மத்திய சென்சார் குழு.

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

செவ்வாய் 2 ஜன 2018