மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

புதிய வெளியுறவுத் துறை செயலாளர் நியமனம்!

புதிய வெளியுறவுத் துறை செயலாளர் நியமனம்!

இந்திய வெளியுறவுத் துறையின் புதிய செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஜனவரி 1) இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு.

இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக இருந்துவரும் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக்காலம் வரும் ஜனவரி 28ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து, புதிய வெளியுறவுத் துறை செயலாளராக விஜய் கேசவ் கோகலே பதவியேற்க இருக்கிறார். இவர், இந்தப் பதவியில் இரண்டு ஆண்டுகள் நீடிப்பார்.

1981ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவு அலுவலராக, வெளியுறவுத் துறையில் இணைந்தவர் விஜய் கேசவ். தற்போது வெளியுறவு விவகாரங்களுக்கான பொருளாதாரப் பிரிவின் செயலாளராக இருந்து வருகிறார். விஜய் கேசவை வெளியுறவுத் துறை செயலாளராக அமர்த்த, மத்திய அமைச்சகத்தின் நியமனக்குழு சம்மதம் தெரிவித்துவிட்டது.

சீனாவுக்கான இந்திய தூதராக, இவர் ஜனவரி 2016 முதல் அக்டோபர் 2017 வரை பதவி வகித்தார். இந்திய – சீன உறவுகளைக் கையாளுவதில் இவருக்கு அனுபவம் அதிகம். சமீபத்தில் சிக்கிம்மில் உள்ள டோக்லாம் பள்ளத்தாக்குப் பகுதியை சீன மக்கள் விடுதலைப்படை ஆக்கிரமித்திருந்தது. தனது பேச்சுவார்த்தையின் மூலமாக, இவர் அந்தப் பிரச்னையைத் தீர்த்தார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 2 ஜன 2018