மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

உரங்களுக்கும் ஆதார் கட்டாயம்!

உரங்களுக்கும் ஆதார் கட்டாயம்!

உரங்களை மானிய விலையில் பெற ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு வெளிச்சந்தையில் நாளுக்கு நாள் அதன் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்தப் புதிய நடைமுறை விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் வேளாண் பணிகளைச் செய்து வருவதாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆதார் முக்கியமில்லை என்று கூறினார்கள். ஆனால், தற்போது ஆதார் அனைத்துக்கும் கட்டாயமாகிவிட்டது. ஏற்கெனவே தண்ணீர், விதை நெல் இல்லாமல் ஏகப்பட்ட பயிர்கள் அழிந்தன. தற்போது உள்ள கொஞ்ச பயிர்களையாவது உரத்தைக்கொண்டு காப்பாற்றலாம் என்று பார்த்தால் அதற்கும் ஆதார் கட்டாயம் என்று கூறுகிறார்கள். விவசாயிகளுக்கு உரம் வாங்குவதற்கு ஆதாரை முதலில் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 2 ஜன 2018