மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

புதிய ஆண்டில் இதில் ஒன்றை தினமும் செய்யலாம்!

1. ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று பேரையாவது பாராட்டு.

2. மாதம் ஒருமுறையாவது சூரிய உதயத்தைப் பார்.

3. ‘நன்றி’ - இந்த வார்த்தையை முடிந்தவரை அதிகம் உபயோகி.

4. உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.

5. உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.

6. ரகசியங்களைக் காப்பாற்று.

7. புதிய நண்பர்களைத் தேடிக்கொள். பழைய நண்பர்களை மறந்துவிடாதே.

8. தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.

9. உன் தவற்றை தயங்காமல் ஒப்புக்கொள்.

10. தைரியமாக இரு. உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி.

11. ஒருபோதும் மற்றவரை ஏமாற்றாதே.

12. கவனிக்கக் கற்றுக்கொள். சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம்தான் வரும்.

13. கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.

14. உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

15. மேலதிகாரிகளையோ, பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.

16. ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.

17. வதந்தி, வம்பு பேசுவதைத் தவிர்.

18. போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.

19. ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒப்புக்கொள்ளாதே. பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

20. வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.

21. பொருள்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

22. எனக்குத் தெரியாது, மன்னிக்கவும் என்பதை தேவையான இடத்தில் சொல்லத் தயங்காதே.

இதுவும் கடந்து போகும்!

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப்பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மைவிட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்?

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்துசென்று கொண்டுதானே இருக்கின்றன. ஒருவிதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும்போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

வெற்றிகள் கிடைக்கும்போது ‘இதுவும் கடந்து போகும்’ என்பதை நினைவில்கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

தோல்விகள் தழுவும்போது ‘இதுவும் கடந்து போகும்’ என்பதை நினைவில்கொள்ளுங்கள். சோர்ந்துவிட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது ‘இதுவும் கடந்து போகும்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும்போது அவர்களை கௌரவிப்பீர்கள். அவர்கள் விலகும்போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும்போது ‘இதுவும் கடந்து போகும்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மன அமைதியை இழக்க மாட்டீர்கள்.

நெற்றி சுருங்கும்போதெல்லாம் ‘இதுவும் கடந்து போகும்’ என்பதை நினைவில்கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

நினைவில்கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய்விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கிவிடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 2 ஜன 2018