மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

மாரி 2: புதிய அப்டேட்!

மாரி 2: புதிய அப்டேட்!

தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள ‘மாரி 2’ படத்தின் அதிகாரபூர்வ லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்த படம் மாரி. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மாரி 2 படத்தில் தனுஷுடன், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த மாத இறுதியில் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. மாரி 2 படத்தையும், முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்குகிறார். இந்தப் படத்தின் அதிகாரபூர்வ லோகோவைப் புத்தாண்டை முன்னிட்டு பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், “2017-க்கு நன்றி. 2018-ஐ வரவேற்போம். நம்பிக்கையுடன் புத்தாண்டில் நுழைவோம். இது ஒரு புதிய ஆரம்பம். மாரி 2 படத்தின் லோகோவை வெளியிடுகிறேன். இந்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018