மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

லோக் ஆயுக்தா: பாமக போராட்டம்!

லோக் ஆயுக்தா: பாமக போராட்டம்!

‘லோக் ஆயுக்தா, சேவை உரிமைச் சட்டம் கோரி 4ஆம் தேதி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (ஜனவரி 1) விடுத்துள்ள அறிக்கையில், “புற்றுநோய், கரையான், ஊழல் ஆகிய மூன்று விஷயங்களில் மிகவும் கொடுமையானது ஊழல்தான். தமிழகத்தின் இன்றைய வீழ்ச்சிக்கு அடிப்படையாக உள்ள ஒற்றைப் பெருந்தீமை ஊழல்தான். தமிழகத்தையும் சமூகத்தையும் மிக வேகமாக அரித்துக்கொண்டிருக்கும் ஊழலைத் தமிழகத்தை ஆளும் திராவிட ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்து வாக்கு வாங்கிய அதிமுக பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதில் திராவிடக் கட்சிகளுக்கு உள்ள அக்கறை இவ்வளவுதான்” என்றும் வேதனைத் தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 2 ஜன 2018