மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

கோபியுடன் கைகோக்கும் சித்தார்த்

கோபியுடன் கைகோக்கும் சித்தார்த்

இயக்குநர் கோபி நயினார் இயக்கும் அடுத்த படத்தில் சித்தார்த் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோபி இயக்கத்தில், தற்கால சமுதாயத்தின் முக்கிய பிரச்னையை மையமாக வைத்து உருவான திரைப்படம் அறம். நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து கோபி நயினார் அடுத்ததாக சித்தார்த்தை முன்னணி கேரக்டரில் நடிக்கவைத்து இயக்குவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு இயக்குநர் கோபி நயினார் அளித்துள்ள பேட்டியில், அடுத்த படம் குறித்து சித்தார்த்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், உறுதியான பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார். மேலும் சித்தார்த் நடிக்க இருப்பது ‘அறம்' படத்தின் இரண்டாவது பாகமா என்று கேட்டபோது, இது முற்றிலும் மாறுபட்ட கதை என்றும் நயன்தாரா தற்போது பிசியாக இருப்பதால் இந்தப் படத்தை முடித்த பின்னர், அறம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவேன் என்றும் கோபி கூறியிருக்கிறார்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 2 ஜன 2018