மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

உலகத் தரத்தில் தமிழக அருங்காட்சியகங்கள்!

உலகத் தரத்தில் தமிழக அருங்காட்சியகங்கள்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் வகையில், விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் தமிழகத்திலுள்ள அருங்காட்சியகங்கள் நவீனப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் பாண்டியராஜன்.

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், நேற்று முன்தினம் (டிசம்பர் 31) பழனி கோயிலுக்குச் சென்றார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்திலுள்ள 35 அருங்காட்சியகங்களும் உலகத் தரத்துக்கு மாற்றப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

“அருங்காட்சியகங்களை நவீனப்படுத்துவது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவாகும். அதை நனவாக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் அனைத்தையும் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. வரும் 2018ஆம் ஆண்டுக்குள் இந்த நடவடிக்கைகள் முற்றுப்பெறும்.

தற்போது சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுவருகின்றனர். ஒரு மில்லியன் பார்வையாளர்கள் வந்து பார்க்கும் வகையில், அந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்த உள்ளோம். தமிழகத்திலுள்ள அனைத்து அருங்காட்சியகங்களையும், கடந்த ஆண்டில் 11.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். வரும் ஆண்டில் இதை மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார். அதோடு, 20 மாவட்ட அளவிலான அருங்காட்சியகங்களை, ரூ.4 கோடியில் நவீனப்படுத்த இருப்பதாகவும் பாண்டியராஜன் தெரிவித்தார்.

இதுவரை அருங்காட்சியகங்கள் இல்லாத ஊர்களில், விரைவில் அவை அமைக்கப்படும் என்று கூறியவர், திருவள்ளூர் மாவட்டத்தில் மூதாதையர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்ததையும் தன் பேச்சில் குறிப்பிட்டார். “அரியலூரில் டைனோசர் முட்டை வடிவில் சில தடயங்கள் கிடைத்துள்ளன. அதேபோல, திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரில் வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அதை ஆய்வுசெய்து காட்சிப்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. இந்தப் பணிகள் முடிந்ததும், அரியலூரில் அருங்காட்சியகம் திறக்கப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 80 அகழாய்வுகள் நடந்துள்ளன. இதில் 41 ஆய்வுகள் மத்திய அரசு சார்பிலும், 39 தமிழகத் தொல்லியல் துறை சார்பிலும் நடத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் கிடைத்த பொருள்கள் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. மற்றவை அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

தமிழகத்திலுள்ள சமணர்களின் படுக்கைகள், அவர்களின் வாழ்க்கை முறை குறித்த பாறை ஓவியங்கள் விரைவில் காட்சிப்படுத்தப்படும் என்றும், விரைவில் அறிமுகப்படுத்தப்படும் தொல்லியல் சுற்றுலாவில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் பாண்டியராஜன் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 2 ஜன 2018