மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

யானைத் தந்தங்கள்: விற்கவும் வாங்கவும் தடை!

யானைத் தந்தங்கள்: விற்கவும் வாங்கவும் தடை!

சீனாவில் யானைத் தந்தங்களை விற்கவும் வாங்கவும் நேற்று முன்தினம் (டிசம்பர் 31) தடை விதிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான யானைகள் தந்தத்துக்காகக் கொல்லப்படுகின்றன. இவ்வாறு வேட்டையாடப்படுவதால் யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. எனவே, உலகம் முழுவதும் தந்தங்களால் ஆன பொருள்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உலக வனவிலங்குகள் நிதியகம் வலியுறுத்தி வருகிறது.

1990ஆம் ஆண்டு சீனாவில் யானை இனங்களைப் பாதுகாக்கும் வகையில் சர்வதேச அளவிலான யானைத் தந்தம் விற்பனைக்குச் சீன அரசு தடை விதித்தது. 2016ஆம் ஆண்டு உள்நாட்டிலும் யானைத் தந்தங்களை விற்பதும் வாங்குவதும் சட்டவிரோதமான செயல் எனத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, அரசின் அனுமதியுடன் நடைபெற்றுவந்த 67 யானைத் தந்த தொழிற்சாலைகளும், விற்பனைக் கூடங்களும் மூடப்பட்டன. இதனால், உள்நாட்டில் யானைத் தந்தம் வர்த்தகம் 65% சரிவடைந்தது. வெளிநாடுகளில் இருந்து கடத்திவருவது 80% குறைந்தது.

இந்த நிலையில், யானைத் தந்தங்களை விற்பதும் வாங்குவதும் சட்டவிரோதம் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. மேலும் 105 யானைத் தந்தம் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை கூடங்கள் இழுத்து மூடப்படுகின்றன.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தந்தங்களால் செய்யப்பட்ட பொருள்களுக்கு பிரிட்டன் தடை விதித்தது.

உலகில் இருந்த 24 வகையான யானை இனங்களில் 22 வகை யானை இனங்கள் அழிந்து, தற்போது ஆப்பிரிக்க யானை மற்றும் இந்திய (ஆசிய) யானை ஆகிய இரு யானை இனங்கள் மட்டுமே உள்ளன. இதனால், கடந்த பத்தாண்டுகளில், தந்தத்துக்காக வேட்டையாடப்பட்டதில், ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளன. 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 3,52,271 ஆப்பிரிக்க யானைகள் அழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018