மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: தொடரும் சமத்துவமின்மை!

சிறப்புக் கட்டுரை: தொடரும் சமத்துவமின்மை!

அலெக்ஸ் எம்.தாமஸ்

உலக சமத்துவமின்மை அறிக்கை 2018 கடந்த வாரத்தில் தாமஸ் பிகேட்டி மற்றும் இமானுவேல் சேஷ் மற்றும் அவர்களது குழுவால் வெளியிடப்பட்டது. உண்மையில் பிகேட்டி 2015ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘21ஆம் நூற்றாண்டின் மூலதனம்’ என்ற புத்தகத்தில் இதை நிரூபித்துள்ளார். இது வாடகைக்காரர்களின் ஒரு கிளர்ச்சியை வெளிக்காட்டுகிறது. “இந்தச் சமூகம் சொத்துகளை வாடகைக்கு அல்லது திரும்பப்பெற முயற்சித்துக்கொண்டிருக்கிறது” என்கிறார் ஜான் மேனார்டு கெய்ன்ஸ்.

இந்தச் சிறிய தொகுப்பு, பொருளாதாரம் மற்றும் செல்வத்தில் சமத்துவமின்மை குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறது. வாடகைக்காரர்கள் ஒரு சிறந்த வாழ்க்கையைப் பெறுவது இன்றியமையாதது. பிகேட்டின் புத்தகத்தில் உள்ள முக்கியமான ஒன்று, மூலதனத்தின் வளர்ச்சி வீதம், ஜிடிபியைப் பொறுத்து அமையும். (இதில் சாதாரணப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், பத்திரங்கள், நிதி சார்ந்த சொத்துகள், நிலங்கள் மற்றும் வீடுகள் ஆகியவையும் அடங்கும்)

இந்தியாவைப் பொறுத்தவரையில் அதிகளவில் மக்கள் ஏழைகளாகவே உள்ளனர். சமத்துவமின்மையும் அதிகமாக உள்ளது. 93 சதவிகிதக் குடும்பங்களின் ஆண்டு வருவாய் ரூ.2,50,000க்கும் குறைவாகவே உள்ளது. அதாவது மாதத்துக்கு ரூ.21 ஆயிரம் கூட வருவாய் ஈட்டாதவர்கள் ஆவார். இவர்கள் தனிநபர் வரி கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அதே நேரத்தில் இந்தியாவின் மொத்த செல்வத்தில் 53 சதவிகிதத்தை இந்தியாவின் 1 சதவிகித பணக்காரர்கள் வைத்துள்ளனர். இது அண்மையில் கிரெடிட் சூயிஸ் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. செல்வந்தர்களே மேலும் மேலும் செல்வங்களைக் குவித்துவருகின்றனர். இவர்கள் தங்களது சமூகப் பொருளாதார நிலையைப் பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்குச் சுகாதாரமான சுற்றுச்சூழல், சிறந்த கல்வி வசதி, தரமான சுகாதாரப் பாதுகாப்பு போன்றவற்றை அளிக்கின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையும் இந்தியாவில் சமத்துவமின்மை அதிகரித்துள்ளதை எடுத்துரைக்கிறது. இந்த ஆய்வறிக்கையில், ‘கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பானவற்றில் கடந்த சில ஆண்டுகளாகக் கல்வியின் தரம் மற்றும் சுகாதாரச் சேவை கிடைப்பதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் மக்களின் வருவாய் சமமற்று காணப்படுகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.எம்.எஃப். நிதியாண்டு பாதுகாப்புத் துறை இயக்குநர் விட்டர் காஸ்பர் கூறுகையில், “உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த குடிமக்களைக் கவனித்தால் சமத்துவமின்மை என்பது கடந்த 30 ஆண்டுகளாக வேகமாக அதிகரித்துவருகிறது. இந்த இடைவெளியானது 19ஆம் நூற்றாண்டுகளிலேயே வளரத் தொடங்கிவிட்டது. இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சமத்துவமின்மை என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தரப்பினருக்குமான வருவாயும் மாறுபட்டுக் காணப்படுகிறது. ஒரே நாட்டில் அனைத்து மக்களுக்குமான ஊதியம் என்பது அவரவர் பணிகளைப் பொறுத்து மிகப்பெரிய மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் கூடுதலாக முதலீடு செய்வதன் மூலம் இப்படிப்பட்ட சமத்துமின்மையைக் குறைக்கலாம். நிதியாண்டு கொள்கைகள் வளர்ச்சியை அதிகரிக்கச் சிறந்த ஆயுதமாகும். எனவே சிறந்த நிதியாண்டுக்கான கொள்கைகளை வகுப்பது முக்கியமாகும்” என்றார்.

நம்முடைய சமூகப் பொருளாதார நிலைகள் நமக்கு வேலை மற்றும் வேலை சார்ந்த அமைப்பையே வழங்குகிறது. நமக்கு வேலைகள்தான் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வீன் தனது பயோகிராப்பியில், கார்ல் மார்க்சின் மூலதனத்திலிருந்து சில வரிகளைக் குறிப்பிடுகிறார். ஒரு சராசரி பிரிட்டிஷ்காரர் தனது 80,224 மணி நேரங்கள் வேலை செய்கிறார். இது 1961களில் 69,000 மணி நேரமாகத்தான் இருந்தது. பலருக்கு உழைப்பு மற்றும் தூக்கத்துக்கு அப்பாற்பட்ட வேறு எதுவுமில்லை. இத்தகைய சமூகப் பொருளாதார நிலைகளில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் வேலை நாள்களையும் குறைக்கவில்லை, ஊதியங்களையும் அதிகரிக்கவில்லை.

ஒவ்வொரு முறையும், பெங்களூரு சாலையில் நான் வெளியே செல்லும்போதும், ஏரிகள், மரங்கள், பூங்காக்கள், பேருந்துகள் மற்றும் சாலைகளைக் கண்டு எங்கள் பொதுவான சொத்துகளுக்குப் புறக்கணிக்கப்பட்ட அணுகுமுறைகளைக் கண்டு நான் அதிர்ச்சியடைகிறேன். இது வளர்ச்சியுடன் சேர்ந்துள்ளது. அதிகரித்துள்ள அபார்ட்மெண்டுகள், பெரிய எஸ்.யூ.வி. கார்கள் சாலைகளில் பறந்து கொண்டிருப்பது, எம்.ஐ.டி மற்றும் ஹார்வர்டு உள்ளிட்டவற்றில் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் சர்வதேச பள்ளிகள் ஆகியவையும் தற்போது நிறைந்துள்ளன.

தொழில் நிறுவனங்களிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகள், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் குடியிருப்புகள் ஆகியவையும் நிறைந்துள்ளன. எதிர்காலத்தில், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் சில பெரிய குடியிருப்பு வீடுகளில் உள்ள தங்கள் குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே சேவைகளை வழங்கினால்கூட எனக்கு ஆச்சர்யம் இருக்காது.

எமது சமூகப் பொருளாதார ஒழுங்கின் மரணம் என்பது ஓலமிட்டுக்கொண்டிருக்கிறது. அது மிகவும் சத்தமாக உள்ளது. நமது சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் கடினமாக வேலை செய்ய வேண்டும். அதிகமாகச் சேமிக்க வேண்டும். 2012ஆம் ஆண்டில் மார்க்கெட் டேட்டா என்டர்பிரைசஸ் மதிப்பீட்டின்படி, 10 பில்லியன் டாலர்களை சுயஉதவித் தொழில் துறை கொண்டிருந்தது. எங்களது பிள்ளைகளின் கல்விச் செலவு எங்கள் கடின உழைப்பின் வருவாயிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் முன்னேற்றம் தனிப்பட்ட முடிவுகளையும், செயல்களையும் சார்ந்தே உள்ளது. சிறந்த சுகாதார வசதிகளைப் பெறவும் எங்கள் கடின உழைப்பே உதவுகிறது. நிதித் திட்டங்களையும் எங்கள் கடின உழைப்பே சாத்தியப்படுத்துகிறது.

மேலே விவரிக்கப்பட்டது போல, அனைவருக்கும் ஒரு நல்ல வாழ்வை உறுதி செய்வதற்கான பொறுப்பு கடந்துவிட்டது, இவை யாவும் அனைவருக்கும் தனித்தனியானது என்று விற்பனை செய்யப்பட்டுவிட்டது. இந்தச் சமத்துவமற்ற சமூகத்தில் ஏழைகள் ஒருபோதும் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளைப் பெற இயலாது. ஆனால், பணக்காரர்கள் தங்களிடம் உள்ள செல்வத்தைப் பயன்படுத்தி தனியாரிடம் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படித்தான் இன்றைய நிலை உள்ளது.

நன்றி: ஹஃபிங்டன் போஸ்ட்

தமிழில்: பிரகாசு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 2 ஜன 2018