எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எதிராக மெத்தனால்!

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்குச் சிறந்த மாற்றாக மெத்தனால் இருக்கும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் எலெக்ட்ரிக் வாகனத் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
அரசு ஆலோசனை, கொள்கை உருவாக்க அமைப்பான நிதி ஆயோக், இந்தியாவின் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மெத்தனால் நல்ல தீர்வாக இருக்கும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை உயர்வாக இருக்கும் என்பதாலும் அவற்றின் நிலைத்தன்மை நீண்ட காலம் நீடிக்காது என்பதாலும் மெத்தனால் பயன்பாடு எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும் என்று நிதி ஆயோக் கூறுகிறது. மேலும், மெத்தனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாது என்பதோடு எளிதில் கிடைக்கும் என்று நிதி ஆயோக் வாதிடுகிறது.