மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

அறிமுக அணியின் ஆதிக்கம்!

அறிமுக அணியின் ஆதிக்கம்!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய (டிசம்பர் 31) ஆட்டத்தில் பெங்களூரு எஃப்.சி. அணி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடர்கள் கடந்த நவம்பர் (2017) மாதம் தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிதாகச் சேர்க்கப்பட்ட ஜாம்ஷெத்பூர் மற்றும் பெங்களூரு அணிகள் அறிமுக அணியாக இருந்தாலும் எதிரணிக்குப் பெரும் சவாலாக இருந்து வருகின்றன. நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன்னர் வரை பெங்களூரு அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருந்தது.

நேற்று (டிசம்பர் 31) நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. நேற்றைய போட்டி நடைபெறுவதற்கு முன்பு வரை கேரள அணி 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. எனவே, அறிமுக அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் கேரள அணி விளையாடியது. ஆனால், பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி எதிரணிக்கு கோல் வாய்ப்பு தராமல் செயல்பட்டனர். முதல் பாதியில் அதிக முறை பெங்களூரு அணி கோல் அடிக்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. எனவே, முதல் பாதி சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியில் போட்டியின் 60ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் செட்ரி பெனால்டி முறையில் முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

அதன் பின்னர் கேரள அணி வீரர்கள் எதிரணியை கோல் அடிக்கவிடாமல் தடுக்கும் முயற்சியில் பெரும்பாலும் ஈடுபட்டதால் போட்டியின் 90ஆவது நிமிடம் முடியும் வரை அந்த அணி எந்த கோலும் அடிக்கவில்லை. அதன் பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் பெங்களூரு அணி வீரர் மிகு இரண்டாவது கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதன்பின் வெற்றி உறுதி செய்யப்பட்டதால் சற்றே அலட்சியமாக விளையாடினர் பெங்களூரு அணியினர். இதைப் பயன்படுத்திக் கொண்ட கேரள அணி வீரர் பெக்குமேன் கூடுதல் நேரம் முடிவதற்குள் ஒரு கோல் அடித்து பெங்களூரு அணி வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். எனவே பெங்களூரு அணி வீரர் மிகு மீண்டும் ஒரு கோல் அடித்து 3-1 என்ற கணக்கில் கேரள அணியை வீழ்த்த உதவினார். இந்தச் சீசனில் புதிதாக களமிறங்கி உள்ள பெங்களூரு அணி தொடர்ச்சியாகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி 3 தோல்விகளுடன் 15 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

திங்கள் 1 ஜன 2018