மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை: ரஜினி: திமுக - அதிமுக - தினகரன் நிஜ ரியாக்‌ஷன்!

டிஜிட்டல் திண்ணை: ரஜினி: திமுக - அதிமுக - தினகரன் நிஜ ரியாக்‌ஷன்!

மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “ரஜினியைப் பொறுத்தவரை பவுண்டேஷன் அல்லது அமைப்பைத் தொடங்கும் முடிவில்தான் இருக்கிறார். அவரை நம்பிப் பணம் போட்ட தயாரிப்பாளர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். இப்போது காலா, 2.0 என இரண்டு மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகக் காத்திருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் உடனடியாக அவர் நேரடிக் கள அரசியலில் இறங்கினால், அது அவரது படங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என நினைக்கிறார். அந்தப் படங்கள் இரண்டும் ரிலீஸ் ஆகட்டும். அதற்குள் நமது அமைப்பு மூலமாக மக்களுக்கு நல்லது செய்வோம். நாம் செய்யும் நல்லதைப் பார்த்து மக்களே நம்மைத் தேடி வருவார்கள். நமக்கு உறுப்பினர்கள் அதிகமாவார்கள். நாம் தொடங்கப்போகும் அமைப்பில், எவ்வளவு பேர் உறுப்பினர்களாகச் சேருகிறார்கள் என்பதை வைத்தே நமது ஸ்ட்ரென்த் என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம். காலமும் நேரமும் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்லலாம்’ என்று ரஜினி சொல்லி வருகிறார்.’ - கடந்த 27ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் நான் சொன்னதுதான் இது.

அதுவரை ரஜினி தனிக்கட்சி பற்றிய எந்த முடிவும் எடுக்காமல்தான் இருந்தார் என்று அடித்துச் சொல்கிறது அவரது நண்பர்கள் வட்டாரம். கடந்த 28ஆம் தேதி இரவு தமிழருவி மணியனிடன் நீண்ட நேரம் பேசினார் ரஜினி. அதன் பிறகு வேறு யாரிடமும் அவர் இது சம்பந்தமாகப் பேசவே இல்லை. ’அமைப்பு தொடங்குறேன்... பவுண்டேஷன் தொடங்குறேன் என்று நீங்க சொல்வதெல்லாம் பேசுறதுக்கு நல்லா இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் வெச்சுட்டு நீங்க என்ன செஞ்சாலும் எதுவும் எடுபடாது. தனிக்கட்சி என்ற ஒரு அறிவிப்பைத்தான் மக்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறாங்க.’ என்பதை மணியன் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாராம். மணியன் சொன்னதைக் கேட்டுத்தான் ரஜினி மன மாற்றம் நிகழ்ந்ததாகச் சொல்கிறார்கள். மணியன் சொன்னதிலிருந்து தனிக்கட்சி என்பதை மட்டும் எடுத்துக் கொண்ட ரஜினி, மற்றதெல்லாம் அவர் நினைத்ததைப் போலவே, மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை என்பதை கையிலெடுத்திருக்கிறார். “ என்று முடிந்தது முதல் மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது.

“ரஜினியின் அரசியல் பிரவேச முடிவு என்பதில் அப்செட்டில் இருப்பது திமுக மாவட்டச் செயலாளர்கள் தான். ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிக்கு வாழ்த்துகள்’ என திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் சொன்னாலும், ரஜினியின் அரசியல் வருகை திமுகவுக்கு பாதிப்புகளை உருவாக்கும் என நினைக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதுதான். ‘ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதாவின் எதிர்ப்பாளராக தன்னைக் காட்டிக் கொண்டார் ரஜினி. ஜெயலலிதாவை அவர் எதிர்த்த காரணத்தால், அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் ரஜினிக்கு எதிர்ப்பு அலைதான் இருந்தது. இருக்கிறது. அதனால், அதிமுக தொண்டர்கள் யாரும் ரஜினி பக்கம் சாய மாட்டார்கள். நம் இயக்கத்தில் அவரது ஆதரவு நிலைப்பாட்டில் நிறையப் பேர் இருக்காங்க. அதனால், இங்கே இருந்து அவர் பக்கம் சிலர் சாய வாய்ப்பு இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் ரஜினியால் சிதறுவதால் அவரது வருகை நமக்கு தேவையில்லாமல் சிக்கலைத்தான் உருவாக்கும்’ எனச் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அதே நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, ‘ரஜினி வருவதால் எந்த மாற்றமும் வரப் போறது இல்லை. நம்ம ஆட்கள் யாரும் அங்கே போகப் போறதும் இல்லை. தினகரனோடு இருக்கும் கூட்டத்திலிருந்து வேண்டுமானால் கொஞ்சம் பேரு ரஜினி பக்கம் போவாங்க. அவரைப் பார்த்து நாம பயப்பட வேண்டியது இல்ல. திமுக ஓட்டு கொஞ்சம் பிரியும். தினகரன் ஓட்டுக்களும் பிரியும். அப்போ நமக்குதான் வெற்றி வாய்ப்பு தேடி வரும்.’ என்று கணக்குச் சொன்னதாக சொல்கிறார்கள்.

தினகரனோ, ’ரஜினி வரட்டும், கமல் வரட்டும், யார் வேண்டுமானாலும் வரட்டும். நீங்க குப்பனோ சுப்பனோ 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை ரெடி பண்ணுங்க. எப்படி ஜெயிக்கிறதுனு எனக்குத் தெரியும்’ என்று உடனிருப்பவர்களிடம் சொல்லி வருகிறாராம்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 1 ஜன 2018