மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

இந்து முறையைப் பின்பற்றிய ஜப்பானியர்கள்!

இந்து முறையைப் பின்பற்றிய ஜப்பானியர்கள்!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த காதலர்கள், மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜிகாரு ஒபடா (வயது 27) என்ற பெண்ணுக்கும் அவரது காதலன் யூடோ நினாகாவிற்கும் (வயது 31) மதுரையில் இந்து முறைப்படி நேற்று (டிசம்பர் 31) திருமணம் நடைபெற்றது. பட்டுப் புடவை, வேஷ்டியுடன் முழுக்க முழுக்கத் தமிழர்கள் முறைப்படி இந்தத் திருமணம் நடைபெற்றது.

இது குறித்து மணப்பெண் ஜிகாரு கூறுகையில், "தமிழில் எனக்கு எல்லாமே பிடிக்கும். அதனால்தான் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பினேன்" எனக் கூறினார். முன்னதாக 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவ்விருவரும் ஜப்பானில் திருமணம் செய்துகொண்டனர். மதுரையைச் சேர்ந்த இவரது தோழி வினோதினி ஜப்பானில் வேலை பார்த்துவருகிறார். வினோதினியின் உதவியுடன் ஜிகாரு, இந்தத் திருமண விழாவை மதுரையில் நடத்த முடிவு செய்தார். திருமணப் பத்திரிக்கை முதல் அனைத்து சம்பிரதாயங்களும் இந்து முறைப்படியே நடைபெற்றன. மேள தாளங்களுடன், ஓம குண்டம் வளர்த்து, மந்திரங்கள் ஓதி ஜிகாருவின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 1 ஜன 2018