மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

தலைவர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்!

தலைவர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார்.

பன்னீர்செல்வம் பெரும்பாலான விசேஷ நாட்களை தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் கழிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். அதே போல இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டையும் தனது சொந்த ஊரில் கழித்தார். காலையில் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த பன்னீர் செல்வம், ஆதரவற்ற குழந்தைகளைத் தனது இல்லத்துக்கு வரவழைத்து இனிப்பு வழங்கி அவர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடினார். அந்தப் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர், “தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இப்புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், நாம் அனைவரும் ஒருமித்து உழைத்து, தடைகளைத் தகர்த்து, வளமிக்க தமிழகத்தை உருவாக்கிட உறுதியேற்போம்" என்று தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியையும் வெளியிட்டுள்ளார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தனது வாழ்த்துச் செய்தியில் உலகெங்கும் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழகம் தன் அருமை பெருமைகளை மீண்டும் உறுதியுடன் நிலைநிறுத்திக் கொள்ள புத்தாண்டு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றார் ஸ்டாலின். இதுபோல மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவும் கருணாநிதியிடம் ஆசி பெற்றனர்.

கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், நிர்வாகிகளுடன் புத்தாண்டைக் கொண்டாடினார். நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த் உள்பட தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விசிக தலைவர் திருமாவளவன், வேளச்சேரியிலுள்ள விசிக அலுவலகத்தில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி புத்தாண்டைக் கொண்டாடினார். நிகழ்வில் கிறிஸ்தவப் பாதிரியார்கள் கலந்துகொண்டனர்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 1 ஜன 2018