மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

ஷாப்பிங் ஸ்பெஷல்: ஃபேஷன் காஸ்ட்யூம்கள்!

ஷாப்பிங் ஸ்பெஷல்: ஃபேஷன் காஸ்ட்யூம்கள்!

மணிக்கொடி

இன்றைய நவீன பெண்களுக்கு ஏற்றாற்போல் அவர்கள் விரும்பும் வகையில் ஆடைகள், ஆபரணங்கள் என எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் 2017இல் பெண்களின் மனதைக் கவர்ந்த சில சூப்பர் ஃபேஷன் காஸ்ட்யூம்களின் தொகுப்பு. இதோ உங்களுக்காக...

கலம்காரி

கலம்காரியை, டாப் பிளாக் பிரின்ட் (Block Print) மற்றும் கைகளால் பெயின்ட் செய்யப்படும் டிசைன் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நம் நாட்டின் பாரம்பர்ய டிசைன்களில் ஒன்றான இது புடவை, சுடிதார் உள்ளிட்ட காஸ்ட்யூம் முதல் வீட்டில் மாட்டப்படும் விண்டோ ஸ்க்ரீன் வரை அனைத்திலும் பிரின்ட் செய்யப்படுகிறது.

பண்டைய கால வடிவமைப்புகளைக்கொண்டு அச்சிடப்படுவதால், இதை அனைவரும் விரும்பி வாங்குகிறார்கள். வேலைப்பாடுகளுக்கு ஏற்ப இதன் விலைகளும் இருக்கின்றன. அதாவது கலம்காரி டாப்கள் 500 முதல் 800 ரூபாயை தாண்டியும் விற்பனையாகின்றன.

லாங் ஷ்ரக்

ஆண்களுக்கென வடிவமைக்கப்பட்ட கோட், ப்ளேசர் போன்ற உடைகளை அதிகம் விரும்பி வாங்குவது பெண்கள்தான். விதவிதமான டிசைன், பேட்டர்ன், நிறம் எனப் பெண்களுக்குத்தான் ஏராளமான ஆப்ஷன்ஸ் உள்ளன. ஷர்ட், டி-ஷர்ட், குர்த்தா என எந்த உடை அணிந்தாலும், மேலே ஒரு லாங் ஷ்ரக் உடுத்தினால் இன்னும் கூடுதல் அழகு சேர்க்கிறது.

ப்ளைன் உடையாக இருந்தாலும் இக்கட், கலம்காரி போன்ற பேட்டர்னிலான ஷ்ரக்கை போட்டால் முற்றிலும் வேறு தோற்றம் கிடைக்கும். மலிவான விலையில் கடைகளில் கிடைக்கும் இந்த ஷ்ரக் 2017ஆம் ஆண்டின் கல்லூரிப் பெண்களின் பெஸ்ட் சாய்ஸ்.

லாங்க் ட்யூனிக் (Long Tunic)

லாங் ட்யூனிக் பார்ப்பதற்கு குர்தா போல இருக்கும். ஆனால், இதை ஸ்பகெட்டி (Spaghetti) அல்லது ப்ளைன் டி-ஷர்ட்டுடன் இணைந்து போட வேண்டும். எந்தவிதமான கூடுதல் வேலைப்பாடின்றி எளிமையாக வடிவமைக்கப்படும் இந்த உடை, அனைவருக்கும் பொருந்தும். இதற்கு மேட்ச்சாக லெக்கிங்ஸ் அல்லது ஜீன்ஸ் உடுத்தலாம். ரோல் அப், ஸ்லீவ் மற்றும் பேன்ட் காலர், ட்யூனிக் ஆடைகளின் ஹைலைட். இதன் விலையும் மிகக் குறைவாகவே இருக்கிறது.

கிராப் டாப்

சாதாரண டாப்களின் நீளத்தைக் குறைத்து உடுத்தினால் அது கிராப் டாப். வெஸ்டர்ன், இண்டோ-வெஸ்டர்ன் உடைகள் இரண்டிலும் பல டிசைன்களில் வெளிவந்த கிராப் டாப், சென்ற ஆண்டில் அதிகம் விற்பனையான உடை. இதற்கு மேட்ச்சாக ஸ்கர்ட், பலாசோ பேன்ட், ஜீன்ஸ் உடுத்தலாம். ஒல்லி பெல்லி இடையழகிகளுக்கு இந்த உடை பக்கா ட்ரெண்டு. வெஸ்டர்ன் தோற்றத்துக்கு இதனுடன் பிரேஸ்லெட், டேங்க்லர்ஸ், ஹைய் ஹீல்ஸ் போன்றவற்றைப் போட்டுக்கொள்ளலாம்.

ஜம்ப் சூட்

ஜம்ப் சூட் என்பது முதலில் பாராஷூட்டர்களால் உபயோகிக்கப்பட்ட உடை. பிறகு விண்வெளி வீரர்கள், விமானிகள் என மிக உயரத்தில் பயணம் செய்கிறவர்களுக்குக் கவச உடையாகப் பயன்பட்டது. நாளடைவில் அனைவரும் உடுத்தும் உடையாகவும், பல புதுமைகளைப் புகுத்தி முற்றிலும் ஃபேஷன் உடையாகவும் மாறிவிட்டது. இடுப்பின் மேல் உடை மற்றும் கீழ் ஆடையின் பகுதிகளை இணைத்து, கழுத்திலிருந்து கால் வரை ஒரே உடையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் உடைதான் ஜம்ப்சூட். சிம்பிள் டிசைன் முதல் அதிக வேலைப்பாடுகள் கொண்ட டிசைன் வரை, எல்லா நிறங்களிலும் மார்க்கெட்டில் கிடைக்கும் இந்த ஜம்ப் சூட்டின் விலையும் அதிகமில்லை. அதிலும் இப்போது பெல்ட், குறுகிய கழுத்து பேட்டர்ன், ஸ்லீவ்லெஸ் எனப் பல வெரைட்டிகள் உள்ளன.

சாலிட் புடவை

இக்கட், கலம்காரி என நம் நாட்டுப் பாரம்பர்ய டிசைன்களில் உருவாகும் உடைகள் ஒருபக்கம் விற்பனையில் களைகட்டியிருக்க, மறுபக்கம் சாலிட் உடைகளும் ட்ரெண்டாகி வருகிறது. சென்ற ஆண்டு ப்ளைன் அல்லது சாலிட் உடைகள்தான் ஃபேஷன். ப்ளைன் புடவை, அதற்கு மேட்சாக அதிக வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ். அதை மெருகேற்ற ஜிமிக்கி, வளையல், சோக்கர் என சிம்பிளாகத் தோன்றினாலும், இதுதான் 2017ஆம் ஆண்டின் கிளாசிக் அப்டேட்.

பேஸ்டல்ஸ்

ட்ரெண்ட் என்றால் காஸ்ட்யூம் மட்டுமல்ல; நிறங்களும் அதில் அடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் ட்ரெண்டி நிறம் பேஸ்டல்ஸ். அடர்த்தியான நிறத்தில் வெண்மை தன்மையை அதிகரிப்பதால் உருவாகும் நிறம் பேஸ்டல். பிங்க், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் முதலிய நிறங்களின் பேஸ்டல் ஷேட்ஸ் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அதிலும் இண்டோ-வெஸ்டர்ன் மற்றும் இந்திய உடைகள் இந்த நிறங்களுக்குத் தனி அழகு சேர்க்கும். உடைகளுக்கு மேட்சாக பேஸ்டல் கலர் கற்கள் பதித்த ஆபரணங்களும் அவ்வளவு அழகு..

கோல்ட் ஷோல்டர் ஸ்லீவ்

ஸ்லீவ்லெசும் இல்லாமல், ஃபுல் ஸ்லீவும் இல்லாமல், என்ன வகை டிரஸ் இது என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம். அந்த உடைதான் கோல்ட் ஷோல்டர். முழு நீளச் சட்டைகளில் தோள்பட்டைப் பகுதியில் சிறு பிளவை ஏற்படுத்துவதுதான் இந்த கோல்ட் ஷோல்டர் ஸ்லீவ். ஃபுல் டிரஸ், டி-ஷர்ட், ஷர்ட், டாப், குர்தா என எல்லா வகை உடைகளிலும் இந்த கோல்ட் ஷோல்டர் ஸ்லீவைப் பொருத்தி பெரிய ட்ரெண்ட் செட் செய்தது 2017.

கேப்ஸ் அண்ட் போன்ச்சோஸ் (Capes and Ponchos)

போன்ச்சோஸ் என்பது முந்தைய காலத்தில் பிளாங்க்கெட்டாக (Blanket) பயன்படுத்திய ஒன்று. சில நேரங்களில் மழையிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் பயன்பட்டது. ஆனால், தற்போது அதுவே ஃபேஷன் ஆகிவிட்டது. லெஹெங்கா, கவுன், டாப் போன்றவற்றில் ஸ்லீவ்களுக்குப் பதிலாக, எம்ப்ராய்டரி போன்ற கூடுதல் வேலைப்பாடுகள் நிறைந்த தனிப்பகுதியை, தோள்பட்டை முதல் இடை வரை நீண்டு அமைக்கப்படும் உடைதான் யுவதிகள் இன்று அணியும் போன்ச்சோஸ். இது தற்போது சல்வார்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

ஃப்ரன்ட் ஸ்லிட் (Front Slit)

முன்பெல்லாம் சல்வார் கமீஸ்களில் இருபக்க முடிவில்தான் ஸ்லிட் எனப்படும் சைட் ஓப்பன் இருக்கும். ஆனால், இப்போதைய ட்ரெண்ட் ஃபிரன்ட் அல்லது சென்டர் ஸ்லிட். வெஸ்டர்ன் உடைகள், இந்திய எத்னிக் உடைகள் இரண்டிலும் சென்டர் ஸ்லிட் பொருத்தி வடிவமைப்பதால் பார்ப்பதற்கு மிக அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். கல்லூரி/அலுவலகம் செல்லும் பெண்கள் முதல் திருமணத்துக்குத் தயாராகும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த வகையான ஆடைகள் கிளாஸிக் டச் கொடுக்கும்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 1 ஜன 2018