மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

அதிர்ச்சித் தோல்வியில் செரீனா

அதிர்ச்சித் தோல்வியில் செரீனா

டென்னிஸ் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாகத் திகழ்ந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் நீண்ட நாட்களுக்குப் பின்னர் களமிறங்கிய போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

செரீனா வில்லியம்ஸ் இதுவரை 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார். அவருக்குக் கடந்த வருடம் பெண் குழந்தை பிறந்தது. இதனால் கடந்த (2017) ஜனவரி மாதம் முதல் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியிருந்த அவர் நேற்று முன்தினம் (டிசம்பர் 30) அபுதாபியில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் பங்கேற்றார். அதில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஆஸ்டாபென்கோவை எதிர்கொண்டார். 67 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் ஆஸ்டாபென்கோ 6-2, 3-6, 10-5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இந்த தோல்வியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செரீனா கூறுகையில், “டென்னிஸ் விளையாடுவது, ரசிகர்களின் ஆரவாரம், என்று எல்லாவற்றையும் சிறிது காலம் தவறவிட்டு விட்டேன். மறுபடியும் டென்னிஸ் களம் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது நான் ஒரு குழந்தையின் தாய். களத்தில் இருக்கும் போது குழந்தையின் நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை. அடிக்கடி குழந்தை இருக்கும் பகுதியைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்” எனக் கூறினார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 1 ஜன 2018