பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் இன்று (ஜனவரி 1) வெளியிடப்பட்டுள்ளன.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட 95 கல்லூரிகளில், ஒரு லட்சத்து 31 ஆயிரம் மாணவ-மாணவியர் கல்வி பயின்றுவருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை படிப்பிற்கான தேர்வுகள் 2017 நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெற்றன. அதன் முடிவுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு விவரங்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன தேர்வு முடிவுகள் www. periyaruniversity.ac.in என்ற இணையதளத்திலும் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள் நகலைப் பெறவும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் விண்ணப்பங்களைப் பெற்று, முதல்வர் மூலம் தேர்வாணையர் அலுவலகத்தில், மறுமதிப்பீட்டிற்கு 250 ரூபாய் மற்றும் மறுகூட்டலுக்கு 200 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலினைப் பெற்ற பின்னர் தேவைப்பட்டால் மறுமதிப்பீட்டிற்கு, எழு நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.