மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

தென்னை சாகுபடியை மேம்படுத்த நடவடிக்கை!

தென்னை சாகுபடியை மேம்படுத்த நடவடிக்கை!

கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறைந்துள்ள தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நோயுற்ற மரங்களை நீக்கிவிட்டு புதிய மரங்களை நடுவது போன்ற நடவடிக்கைகளை மத்திய வேளாண் துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சரியான பராமரிப்பு இல்லாததும், நோயுற்ற மரங்களுக்காகத் தரப்பட்ட பூச்சிக்கொல்லி விகிதத்தின் தீவிரமும் தேங்காய் உற்பத்தி குறைந்ததற்குக் காரணமாக இருப்பதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. நோயுற்ற மரங்களை நீக்கிப் புது மரக்கன்றுகளை நடும் மீள் நடுதல் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் தேங்காய் உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கையில் வேளாண் துறை ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 32 மரங்கள் வீதம் ஒரு மரத்திற்கான மானியம் ரூ.1000 மற்றும் ஒரு தென்னங்கன்றுக்கான மானியம் ரூ.40 எனவும் வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

திங்கள் 1 ஜன 2018