மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

இணையதளம்: ரஜினியின் முதல் அம்பு!

இணையதளம்: ரஜினியின் முதல் அம்பு!

தனது ரசிகர் மன்றங்களை இணைக்கும் விதமாகப் புதிய இணையதளத்தை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார்.

சென்னை, ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 31ஆம் தேதி ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதியென்றும், வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.

பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத மன்றங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் படித்தவர்கள், பெண்கள், இளைஞர் உட்பட அனைவரையும் மன்றத்தில் இணைக்க வேண்டும் என்றும் அவர் அப்போதே கூறியிருந்தார்.

தற்போது, மன்றங்களையும், ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் விதமாகப் புதிய இணையதளத்தை அவர் உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவையும் அவர் இன்று (ஜனவரி 1) வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், எனது அரசியல் பிரவேசத்தை வரவேற்றவர்களுக்கு நன்றி. ஒரு முக்கிய அறிவிப்பு. பதிவு செய்யப்பட்ட மன்ற உறுப்பினர்களையும் பதிவு செய்யப்படாத மன்ற உறுப்பினர்களையும் மற்றும் நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்ற மக்களை ஒரு குடைக்குள் கொண்டுவர வேண்டும். அதற்காக rajinimandram.org என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளேன். அதில் நீங்கள் பதிவு செய்து உறுப்பினராக வேண்டும். நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவோம். வாழ்க தமிழக மக்கள். வளர்க தமிழ்நாடு” என்று பேசியுள்ளார் இந்த வீடியோவில் பாபா முத்திரையும் அதற்குக் கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.

அவரது இணையதளப் பக்கத்தில் ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்த வீடியோ இடம் பெற்றுள்ளது. அதற்குக் கீழ், ‘நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ்க் குடி!’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தத் தளம் தமிழகத்தில் நல்லதொரு மாற்றத்தை விரும்பும் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் கருவியாகச் செயல்படும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் வளமான ஒரு தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 1 ஜன 2018