மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

கதாநாயகியாகும் 'பிக் பாஸ்' ஜூலி

கதாநாயகியாகும் 'பிக் பாஸ்' ஜூலி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான ஜூலி தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கவனம் பெற்ற ஜூலி விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இதனையடுத்து ஜூலி கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.

இந்நிலையில் தற்போது ஜூலி 'கே7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் துரை சுதாகர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து ஜூலி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, படத்தின் கதையைக் கேட்டதும் பிடித்துவிட்டது என்றும், இந்த படம் தன் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் கூறினார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 1 ஜன 2018