மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

பிறந்தவுடன் லட்சாதிபதியான குழந்தை!

பிறந்தவுடன் லட்சாதிபதியான குழந்தை!

பெங்களூருவில் நேற்று நள்ளிரவு பிறந்த குழந்தை ஒன்று, பிறக்கும்போதே ஐந்து லட்சம் பரிசுத் தொகையுடன் லட்சாதிபதியாகப் பிறந்துள்ளது.

பெங்களூரு நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புத்தாண்டு நள்ளிரவில் சரியாக 12 மணிக்குப் பிறக்கும் பெண் குழந்தைக்கு பெங்களூரு நகராட்சியின் சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதிப் பத்திரம் பரிசாக அளிக்கப்படும் என பெங்களூரு பெருநகர மேயர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், பெங்களூரு நகரைச் சேர்ந்த புஷ்பா - கோபி தம்பதியருக்கு பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் புத்தாண்டு பிறந்த அதே நேரத்தில், அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, இன்று அந்த மருத்துவமனைக்குச் சென்ற பெங்களூரு பெருநகர மேயர் சம்பத் குமார், வாக்குறுதி அளித்தபடி, பிறந்த குழந்தை மற்றும் அதன் தாயார் புஷ்பா பெயரில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதிப் பத்திரத்தை வழங்கி வாழ்த்தினார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 1 ஜன 2018