மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா!

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா!

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (ஜனவரி 2) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. இதுகுறித்து, மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவர வேண்டுமென்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து, மத்திய அரசினால் தயார் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நடைபெற்றுவரும் குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே, இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது, எதிர்கட்சியினர் விடுத்த யோசனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. குறிப்பாக, முத்தலாக் முறையில் விவாகரத்து செய்பவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்பதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. ஆனாலும், எதிர்கட்சியினரின் கருத்துகள் கேட்கப்படாமல், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 1 ஜன 2018