புதிய தோற்றத்தில் ராணா

பாகுபலி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் ராணா டகுபதி, தன் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்றிரவு (டிசம்பர் 31) வெளியிட்டார்.
ராணா, பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்துவருகிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. ஹாத்தி மேரே சாத்தி எனப் பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துவருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
ராணா நடிக்கும் ஹாத்தி மேரே சாத்தி என்ற திரைப்படம் பற்றிய வேறெந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது. நேற்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் படம் பற்றிய யூகங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் ஒரு யானையுடன் வித்தியாசமான தோற்றத்தில் அமர்ந்துள்ள ராணா இதுவரை ஏற்று நடிக்காத வித்தியாசமான தோற்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.