மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாகக் கடையடைப்பு!

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாகக் கடையடைப்பு!

சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக ஜனவரி 3 ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 5ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்தத் தீர்ப்பில் பட்டாசுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வெளி மாநிலப் பட்டாசு உற்பத்தியாளர்கள் சிவகாசி உற்பத்தியாளர்களிடம் கொள்முதலை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே வழக்கை திரும்பப் பெறக் கோரிக் கடந்த டிசம்பர் 26 முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுடன் வேலைநிறுத்தம் 7ஆவது நாளை எட்டியுள்ளது.

கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அகில இந்திய பட்டாசு சங்கக் கூட்டமைப்பின் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பட்டாசு மற்றும் அதனைச் சார்ந்த உப தொழில் கூட்டமைப்பு சங்கத்தினரைப் பட்டாசு தடை வழக்கில் பிரதிவாதிகளாகச் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

திங்கள் 1 ஜன 2018