மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

ஐ.டி. ஊழியர்களுக்குப் பயிற்சி வகுப்புகள்!

ஐ.டி. ஊழியர்களுக்குப் பயிற்சி வகுப்புகள்!

செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழிக் கற்றல் மற்றும் தானியங்கி முறை ஆகியவை ஐடி துறையில் பணியிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஐடி துறையில் தொடரும் பணியிழப்புகளால் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து ஹைதராபாத் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐ.ஐ.ஐ.டி.) இயக்குநர் பி.ஜே.நாராயணன் கூறுகையில், "ஐடி பணியாளர்களுக்குத் தங்களது பணியில் ஒரு பயம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். இதன் காரணமாக மூத்த பணியாளர்கள் ஏ.ஐ /எம்.எல் போன்றவற்றில் படிக்கவும் விண்ணப்பித்துள்ளனர்" என்றார்.

ஏ.ஐ /எம்.எல் நிறுவனத்தில் வகுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையின் மூலம் ஐடி ஊழியர்கள் தங்களது தனித்திறனை வளர்த்துக்கொள்ள இதுபோன்ற வகுப்புகளில் இணைவது உறுதியாகியுள்ளது. டேலன்ட்ஸ்பிரிட் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு கூறுகையில், "அனுபவம் கொண்ட தொழிலாளர்கள் சுமார் 2000 பேர் இதுபோன்ற வகுப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். 26 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களே அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். ஐந்து ஆண்டுகள் வரை பணியில் உள்ளவர்கள் தங்களது திறனை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகின்றனர்” என்றார்.

விண்ணப்பித்தவர்களில் 400 பேர் தேர்வு செய்யப்பட்டு இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் 200 பேருக்கு ஜனவரி முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும். 4 மாதங்களுக்கு வார விடுமுறையில் இந்த வகுப்புகள் நடைபெறும் என்று பி.ஜே.நாராயணன் கூறுகிறார். இதுகுறித்து ஏ.ஐ./எம்.எல் நிறுவனம், ’நாங்கள் பெண் பணியாளர்களை ஊக்குவிக்கிறோம். அவர்களுக்கு இந்த வகுப்புகளில் சலுகையும் வழங்குகிறோம். சாதாரணமாக இந்த வகுப்புகளுக்கு ரூ.1.75 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ரூ.50,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் 1000 பேருக்குப் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 1 ஜன 2018