ஆன்மிக அரசியலை விளக்க வேண்டும்: தமிமூன் அன்சாரி

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் என்று கூறியதை முழுமையாக விளக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமூன் அன்சாரி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ரஜினி ஆன்மிக அரசியல் என்று கூறியதை முழுமையாக விளக்க வேண்டும். பா.ஜனதா, சிவசேனாவை போல் இருக்கக் கூடாது.
சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் கைதிகளை விடுதலை செய்யத் தமிழக அரசின் முடிவு செய்து அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதில் மதம், ஜாதி பார்க்காமல் அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
பின்புலத்தில் பாஜக
இதேபோல் ரஜினியின் பின்புலத்தில் பாஜக உள்ளதாக இயக்குநர் கவுதமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.