மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

ரஜினி வடிவில் காமராஜர் அடடே..: அப்டேட் குமாரு

ரஜினி வடிவில் காமராஜர் அடடே..: அப்டேட் குமாரு

“என்ன தைரியம் இருந்தா அவர்ட்ட போய் கொள்கை என்னன்னு கேட்ருபீங்க. இருந்தா சொல்ல மாட்டாரா. வச்சுக்கிட்டே வஞ்சனை பண்ணுற ஆளா சார் அவரு. பாழாப் போன சிஸ்டத்தை சரி பண்ணலாமேன்னு இரக்கப்பட்டு இறங்கி வந்திருக்காரு. அவரைப்போய் பிரச்சனையில மாட்டி விடுற மாதிரி கேட்குறதா? அவங்க எழுதிக் கொடுத்ததுல அவ்வளோ தான் இருந்துருக்கும். வேற எதுவும் வேணும்னா முன்கூட்டியே சொல்லுங்க மேலிடத்துல பேசி ஏதாவாது பேசுவாரு. அவரே பாவம் வாடகை கூட கட்ட முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்காரு. புது வருசம் பிறந்ததுக்கு ட்விட்டர்ல வீடியோ ரிலீஸ் பண்ணி வாழ்த்து சொல்லியிருக்காரே தமிழக மக்களுக்கு இதுக்கு மேல என்ன செய்ய முடியும். வேற என்ன தான் எதிர்பார்க்கீங்க. என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்” என்ன பார்க்குறீங்க மன்றத்துக்கு ஆள் எடுக்குறாங்களாம். இப்டி பேசி பழகிட்டா எப்படியும் ஒரு சீட்டு வாங்கிடலாம். எங்க வீட்டுலயே நாலு ஓட்டு இருக்கு. என்ன நான் சொல்றது..

@Rajayogiahgtwa1

உள்ளாட்சி தேர்தல்ல நிற்க மாட்டேன்

பாராளுமன்றத் தேர்தலிலும் நிற்க மாட்டேன்

சட்டமன்றத் தேர்தலில்தான் நிற்பேன்

ஏன் அப்படி?

மூன்றாண்டுகளுக்குள் நடிக்கிற படங்களை நல்லா ஓட்டி கல்லா கட்டிடலாம் சட்டமன்றத் தேர்தல் வரும் போது ஆண்டவர் அழைக்கிறார்னு இமயமலை போயிடலாம்

@Pa_Siva

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், 3 ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்வேன் - ரஜினி..

இப்படித்தான் ஒவ்வொருத்தர் அக்கவுண்ட்லையும் 15 லட்சம் போடுவேனு ஒருத்தர் சொல்லிட்டு இப்ப பிரஸ்மீட் கொடுக்கக்கூட பயந்துக்கினு நாடுநாடா திரிஞ்சிட்டு இருக்காப்டி.

@vishnut87

மீதமுள்ள 364 நாட்களும் நம்மை வெச்சு செய்யும் என்பதால் ஆண்டின் முதல் நாளை நாம் வெச்சு செய்யுறோம்..#அதுவே புத்தாண்டு கொண்டாட்டம்...

@manipmp

ஒவ்வொரு அரிசியிலும் பெயர் இருக்கிறதா என்பது தெரியாது,

ஆனால் கடனுக்கு எடுக்கும் அரிசி மூட்டையில் நம் பெயரில்தான் அட்டை இருக்கிறது

@கருப்பு கருணா

சார்... அன்றாட அரசியல் பற்றி...

அதை விமர்சிக்க மாட்டேன்..

மக்கள் பிரச்சனைக்காக போராடுவீங்களா..?

போராட மாட்டேன்..

சரி...என்னதான் செய்வீங்க..?

கட்சி ஆரம்பிச்சி நேரடியா முதல்வராயிடுவேன்..

இது புதுமாதிரியா இருக்கே சார்..?

ஹாஹாஹா..என் வழி தனி வழின்னு நாந்தான் அப்பவே சொல்லிட்டேனேப்பா..

எங்கே செல்லும் இந்த பாதை...

என்னப்பா கேட்டே..?

ஒன்னுமில்ல சார்..ச்சும்மா...லுலுலாயி..பே.பே...!

@senthilcp

சார்.ஏன் மாத்தி மாத்தி பேசறீங்க?

புரில

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலை இல்லைன்னீங்க, இப்போ சிஸ்டம் சரி இல்லன்றீங்க?

@skalavjm

நேத்து வரை சுவரை அலங்கரித்த காலண்டர்

இன்று தேவையில்லாத ஒன்றாகிப் போனது.

@AnandaRaj_VD

வாழ்க்கையில ஒரு மாற்றத்தை சந்திக்க பல ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

@கருப்பு கருணா

அவரு தொடங்கப்போற கட்சியின் தொண்டர்களை நினைச்சாதான் எனக்கு வருத்தமா இருக்குப்பா. ஆன்மீக அரசியல்ன்னா பட்டை கொட்டை நாமக்கட்டி திரிசனம் ஊதுபத்தி சாம்பிராணின்னு ஏகப்பட்ட செலவாவுமே..எப்பிடித்தான் சமாளிக்கப்போறாங்களோ..ஹரே பாபா..!

@jairamguttuvan

உறுதி செய்யப்பட முடியாத நிலையில் இருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்து தெளிவாகப் பேசும் ரஜினிகாந்த், 2019-ல் திட்டவட்டமாக வரும் என்றநிலையில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உறுதியாக ஏதும் பேசாமல் இருப்பது ஏன்?

அங்கதான் இருக்கு ட்விஸ்ட்

@senthilcp

நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன் - ஜெ.தீபா # வை"கோ வோட லேடி வெர்ஷன் தான் தீபா போல

@senthilcp

ரஜினி வடிவில் காமராஜரை பார்க்கிறேன்- தமிழருவி மணியன்

கமலை மைக்கேல் மதனகாமராஜன்"வடிவில்"பார்க்கிறேன்"னா ஒத்துக்கலாம்,இது"ஓவரா இல்ல?

@Prabakar Kappikulam

மிக அவசரம்

234 யோக்கியர்கள் தேவை

-ஆன்மீகஅரசியல் தலைமையகம்-

@vishnut87

குதிரை பேர அரசு அல்ல, இது குதிரை வேக அரசு - அமைச்சர் ஜெயக்குமார்..

இந்த தடவ ரைமிங் ரைட்டு.. ஆனா டைமிங் தப்பு...

@HAJAMYDEENNKS

நான் அரசியலில் இருக்கும்வரை பிஜேபியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை - தினகரன் #

சபாஷ் "தில்"கரன் !

@prakash

பெரிய ஹோட்டல்களை நடுத்தர மக்கள் லேன்டுமாரக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்

@itzVillan

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பாதையில் அதிமுகவின் ஆட்சி நடக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார் #பாதை மாறி போயி ஒருவருடமாச்சி இலைக்கு மேல் தாமரை முளைத்து விட்டது....

@AdmkFails

சிஸ்டம் சரியில்ல, அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சி பில்டிங் வாடகை கேக்குறானுங்க, விவசாயிக ஒரு கோடி ரூவா காசு கேக்குறாங்க : #Rajinikanth

@Prabakar Kappikulam

தலைவரோட அரசியல் அறிவிப்பு

சும்மா_அதிருதுல்ல

ஐயா.. பெரியவரே.. தண்டவாளத்த விட்டு, இந்தப்பக்கம் வாங்க... ரயில் வர்ற நேரம் அதிரத்தான் செய்யும்...

கொஞ்சம் ஓவராவே...

@கருப்பு கருணா

இந்த மீடியாகாரங்கள நெனைச்சாவே "பக்" ன்னு இருக்கு... திடீர்ன்னு மைக்க நொழைச்சு என்கிட்ட, ஒங்க கட்சியோட கொள்கை என்னன்னு கேட்டுட்டாங்க.. நான் அப்பிடியே ஆடிப் போய்ட்டேன்.. : ரஜினி

பின்னே என்னய்யா...இல்லாததை கேட்டால் மனுசன் இப்பிடித்தான் ஷாக் ஆயிடுவாரு. டர்ட்டி ஊடகாஸ்..!

-லாக் ஆஃப்

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 1 ஜன 2018