மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

அணு ஆயுதத்துக்கான ஸ்விட்ச் என் கையில்!

அணு ஆயுதத்துக்கான ஸ்விட்ச் என் கையில்!

அணு ஆயுதங்களை ஏவுவதற்கான ஸ்விட்ச் தனது மேஜையில் தயாராக உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது புத்தாண்டு உரையில் மிரட்டல் விடுத்துள்ளார் .

வடகொரிய அதிபர் கிம் ஜோங் ஐ.நா ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறார். கடந்த வருடம் டிசம்பர் 29ஆம் தேதியன்று ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக முடித்தார். இது உலக நாடுகளிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனையை கடுமையாக எதிர்த்தன. குறிப்பாக அமெரிக்கா, வடகொரியா மீது பலமுறை பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி வடகொரியாவை அணு ஆயுத நாடாக அதிபர் கிம் ஜோங் அறிவித்தார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து வடகொரியாவை பாதுகாத்து கொள்ளவே அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாகவும் அதிபர் கிம் ஜோங் பலமுறை விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 1) தனது புத்தாண்டு தின சிறப்புரையில் அதிபர் கிம் ஜோங் , "வடகொரியா அணு ஆயுத சோதனைகளை முழுவதுமாக முடித்துவிட்டது. வடகொரியாவின் அணு ஆயுதங்கள் அமெரிக்காவின் முக்கிய இடங்களை தாக்கும் திறன் பெற்றவையாக உள்ளது . அவற்றை ஏவுவதற்கான ஸ்விட்ச் எனது மேஜை மீது தயார் நிலையில் உள்ளது. அமெரிக்காவை மிரட்டுவதற்காக இதை கூறவில்லை இதுதான் எதார்த்த நிலைமை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

திங்கள் 1 ஜன 2018