மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

பசுமை புத்தாண்டு மணல் சிற்பம்!

பசுமை  புத்தாண்டு மணல் சிற்பம்!

புத்தாண்டை முன்னிட்டு பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் நேற்று (டிசம்பர் 31) புத்தாண்டு மணல் சிற்பங்களை வடித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று (ஜனவரி 1)ஆங்கிலப் புத்தாண்டை மக்கள் கொண்டாடிவருகின்றனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 30 அடி உயரம், 60 அடி அகலத்தில் ஜெகநாதர் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். இந்தச் சிற்பத்தை உருவாக்க அவர் 800 டன் மணலைப் பயன்படுத்தியுள்ளார். 40 மாணவர்களின் உதவியுடன் 2 நாட்களில் இந்த சிற்பத்தை வடிவமைத்ததுடன் பசுமை 2018 என்னும் மணல் சிற்பத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.

ஜெகநாதர் சிற்பத்தை வடிவமைத்ததன் மூலம் 2013ஆம் ஆண்டு இவர் படைத்த சாதனையை இவரே முறியடித்துள்ளார். அப்போது அவர் 25 அடி உயரத்தில் ஜெகநாதர் சிற்பத்தை வடிவமைத்திருந்தார். தற்போது 30 அடி உயரத்தில் வடிவமைத்துள்ளார். இவர் உருவாக்கியுள்ள இந்த சிற்பத்தை, ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இவர் வடிவமைத்துள்ள சிற்பங்களின் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு, புத்தாண்டை வரவேற்க சுதர்சன் பட்நாயக், ஜெகநாதர் சிற்பம் உட்பட பல்வேறு சிற்பங்களை வடிவமைத்து, பிறக்கும் புத்தாண்டு அமைதியாகவும், இனிதாகவும் இருக்கட்டும் என வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 1 ஜன 2018