தவன் நடனம்: ரசிகர்கள் கருத்து!

கிரிக்கெட் தொடருக்காகத் தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியினர் போட்டிகள் தொடங்கும் முன்பே ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுவிட்டார்கள். ஆனால், இந்தப் பாராட்டு கிரிக்கெட்டுக்காக அல்ல. நடனத்துக்காக.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சியின் இடையே சிறிது நேரம் ஓய்விற்காக வெளியே சென்று நேரம்செலவிட்டு வருகின்றனர். சமீபத்தில் திருமணமான விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். அவர் தென்னாப்பிரிக்காவில் அனுஷ்காவுடன் ஷாப்பிங் சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
கோலி, ஷிகர் தவன் இருவரும் வெளியே சென்றிருந்தபொழுது, ஒரு இசைக் குழு இசையமைத்துக்கொண்டிருப்பதைக் கண்டு அந்த இசைக்கு நடனமாடியுள்ளனர். இந்த நடனம் வெகுவாக ரசிக்கப்பட்டு, அதன் வீடியோவும் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.
வீடியோவை ரசிப்பதுடன் பல்வேறு விதமான கருத்துக்களையும் ரசிகர்கள் முன்வைக்கிறார்கள். காயம் காரணத்தால் தவன் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது நடனமோ அவர் நலமுடன் உள்ளார் என்பதைக் காண்பிக்கிறது. எனவே அவர் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்விகளை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.