மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம்!

பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம்!

முன்கூட்டியே திட்டமிடாமல், முதல்வர்கள் பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

ஒவ்வொரு மாநில முதல்வருக்கென்றும் தனியாக பாதுகாப்புப்படை உள்ளது. இசட் அல்லது இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர, மாநில காவல்துறையும் இவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். ஆனால், ஒரு மாநிலத்தின் முதல்வர் வெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது, பாதுகாப்பு நடைமுறைகளில் பெருமளவு குழப்பம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இதனைத் தவிர்க்கும்பொருட்டு, மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘எதிர்பாராதவிதமாக, மாநில முதல்வர்கள் திடீரென வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம்’ என்று அறிவுறுத்தியுள்ளது.

“முதல்வர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது, அவர்களது நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வெறும் பாதுகாப்பு பிரச்சனை மட்டுமல்ல; வேறு மாநிலங்களில் அந்த முதல்வருக்கு அதிகாரம் இல்லாததும் இதற்குக் காரணம். ஏனென்றால் குறிப்பிட்ட மாநிலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு, அந்த மாநிலத்தின் முதல்வரே பொறுப்பு.

எதிர்பாராமல் பயணங்களை மேற்கொள்ளும்போது, அந்த மாநிலத்தில் இக்கட்டான சூழ்நிலைகள் அல்லது சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தலைமைச் செயலாளர்கள் தங்கள் மாநில முதல்வரின் வேறு மாநிலப் பயணம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியும்” என்று இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 1 ஜன 2018