மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

புத்தாண்டு : விபத்து குறைவு!

புத்தாண்டு : விபத்து குறைவு!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புத்தாண்டில் விபத்து குறைந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் சென்னையில் இளைஞர்கள் கடற்கரை சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். மது அருந்தியும், புது வருடம் பிறந்த உற்சாகத்திலும் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் அசுர வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இதனைத் தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு சென்னையில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சென்னை மாநகரில் 51 இடங்களில் ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

இருப்பினும் சென்னையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 179 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்து குறைந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 120 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள காவல் துறையினர் இந்த ஆண்டு 2 பேர் மட்டுமே இறந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 1 ஜன 2018