மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

பொறுத்திருந்து பாருங்கள்!

பொறுத்திருந்து பாருங்கள்!

சட்டப்பேரவையில் தனது செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று டிடிவி தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டியும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டும் திருவாரூரின் மன்னார்குடி அருகே தட்டான்கோவிலில் உள்ள குலதெய்வக் கோயிலில் டிடிவி தினகரன் தனது குடும்பத்தினருடன் இன்று வழிபாடு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது. எங்களின் குறிக்கோளும் அதுதான். தோல்வி பயத்தில் அதிமுகவினர் உளறுகின்றனர்” என்று கூறினார்.

சட்டப்பேரவையில் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார்.

மேலும், ஆர்.கே.நகர் பகுதி மக்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி நன்றி தெரிவிக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ள எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. என் மேல் உள்ள வழக்குகளில் வெற்றி பெறுவேன். பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் இருப்பவர்கள் எங்களுடன் வருவதற்குத் தயாராகிவிட்டனர்” என்று தெரிவித்தார்.

ஜனவரி 8ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 1 ஜன 2018