மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

போயஸ்: ரசிகர்களைச் சந்தித்த ரஜினி

போயஸ்: ரசிகர்களைச் சந்தித்த ரஜினி

அரசியல் அறிவிப்பை நேற்று வெளியிட்ட நிலையில், போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன்பு இன்று குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கடைசி நாளான நேற்று (டிசம்பர் 31) தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் அறிவித்தார்.

இதனால் அவரது ரசிகர்கள் தீவிர உற்சாகத்தில் உள்ளனர். சமூக வலைதளங்களில், ‘மீண்டும் போயஸ் கார்டனுக்குத் திரும்பும் தமிழக அரசியல்’, ‘போயஸ் கார்டனிலிருந்து மீண்டும் ஒரு முதலமைச்சர்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் ரஜினி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 1) ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரஜினியின் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் அவரது ரசிகர்கள் திரண்டனர். இதையடுத்து தனது வீட்டிலிருந்து வெளியில் வந்த ரஜினிகாந்த், ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பொது இடங்களுக்குச் செல்லும்போது ரஜினிகாந்த் பைஜாமா அணிவதையே வழக்கமாக வைத்திருப்பார். ஆனால் இன்று வெள்ளை நிற சட்டை, வேட்டி அணிந்து, ஒரு அரசியல்வாதிக்குரிய தோற்றத்தில் ரசிகர்களைச் சந்தித்தார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தற்போது அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன், விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 1 ஜன 2018