மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

புத்தாண்டுக் கொண்டாட்டம் :11 பேர் பலி!

புத்தாண்டுக் கொண்டாட்டம் :11  பேர் பலி!

தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட விபத்துகளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில், விபத்தில்லா மற்றும் பாதுகாப்பான புத்தாண்டைக் கொண்டாட போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும் 11 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரெய்மான் (29). சென்னையில் பணிபுரிந்துவந்த இவர் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக மெரீனா கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்றார். கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

எழும்பூர் லேன்ட்ஸ் கார்டன் சாலையில் வாகனத்தில் நெருப்பு பறக்கும் அளவுக்கு அதி வேகமாகச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் நடைபாதையில் மோதியதில். தலையில் படுகாயம் அடைந்த ரெய்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபோன்று ஆவடியிலும், எழும்பூரிலும் ஏற்பட்ட இருவேறு விபத்துகளில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மது அருந்தியிருந்தனரா, அல்லது பைக் ரேஸில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சின்னம்பாளையம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தீபன் (17), வினோத்குமார் (17), மணிகண்டன் (18) ஆகிய 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரத்தில் இரு சக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கரூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் போக்குவரத்து ஊழியர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 1 ஜன 2018