மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

மத்திய அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட 5 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்பவுள்ளது.

இந்திய ஆடிட்டர் ஜெனரல் (CAG) சார்பாக டிசம்பர் 19ஆம் தேதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ, டெலினார், வீடியோகான் டெலிகாம், குவாட்ரண்ட் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய 5 நிறுவனங்கள் இணைந்து அரசின் வருவாயில் ரூ.14,800 கோடியைக் குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அரசு கருவூலத்தில் ரூ,2,578 கோடி குறைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட 5 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய, உரிமங்கள் வழங்குவதற்கான கட்டணத்தில் ரூ.1,015.17 கோடியும், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணத்தில் ரூ.511.53 கோடியும், தாமதமாகக் கட்டணம் செலுத்தியதற்கான வட்டித் தொகையில் ரூ.1,052.13 கோடியும் குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளது.

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் ரூ.1,893.6 கோடியும், டெலினார் நிறுவனம் ரூ.603.75 கோடியும், வீடியோகான் நிறுவனம் ரூ.48.08 கோடியும், குவாட்ரண்ட் நிறுவனம் ரூ.26.62 கோடியும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.6.78 கோடியும் குறைவாக அரசுக்குச் செலுத்தியுள்ளன. இந்நிலையில் அரசின் வருவாய் இழப்புக்குக் காரணமாக இருந்த இந்த 5 நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத் தொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்பவுள்ளது. இந்த 5 நிறுவனங்களில் வீடியோகான் டெலிகாம், டெலினார், டாடா டெலிசர்வீசஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் தனது மொபைல் சேவைச் சொத்துகளை ஏர்டெல் நிறுவனத்திடம் விற்பனை செய்துவிட்டன. அதேபோல, குவாட்ரண்ட் நிறுவனமும் தனது சேவையை நிறுத்திவிட்டது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 1 ஜன 2018