மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

முடக்கப்பட்ட முரசொலி இணையதளம்!

முடக்கப்பட்ட முரசொலி இணையதளம்!

ஆங்கிலப் புத்தாண்டு தினமான இன்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இணையதளப் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.

திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி கடந்த 1942ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. முரசொலி தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டுக் கடந்த ஆண்டு பவள விழாவும் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் முரசொலியின் இணையதளப் பக்கம் இன்று (ஜனவரி 1) ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஹேக்கர்களைக் குறிக்கும் புகைப்படத்துடன், "இணையதளத்தை நிர்வகிக்கும் அட்மின்கள், இணையப் பாதுகாப்பு குறித்து இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்"என்று பதிவிட்டுள்ளனர். மேலும் அதில், கவலைப்படாதீர்கள், உங்கள் பக்கத்தின் முகவரியை index.php யில் இருந்து newyear.php என்று மட்டுமே மாற்றியிருக்கிறேன், உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து இணையதளம் முடக்கம் தொடர்பாக தி.மு.க.வின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். முடக்கப்பட்ட இணையதளத்தை சீரமைக்க தொழில்நுட்பக் குழுவினர் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து முரசொலி இணையப் பக்கம் தற்போது மீட்கப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளது.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

திங்கள் 1 ஜன 2018