மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

புத்தாண்டை வரவேற்ற சென்னை!

புத்தாண்டை வரவேற்ற சென்னை!

ஆட்டம் பாட்டம், வாண வேடிக்கை, விசில் சத்தம் விண்ணைப் பிளக்க 2018ஆம் புத்தாண்டு பண்டிகையை சென்னை மக்கள் ஆரவாரமாக வரவேற்றனர்.

புத்தாண்டையொட்டி சென்னை மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் கடல் அலைமோதியது. புத்தாண்டு தொடங்கியதும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தும், இனிப்புகளைப் பரிமாறியும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். செல்லும் வழியில் முகமறியா நபருக்கு கூட ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லும் போது சமத்துவத்தை உணர முடிந்தது. பின்னர் ஆங்காங்கே நடத்தப்பட்ட வானவேடிக்கைகள் விண்ணை அலங்கரித்தன. செல்போன்களில் ஒரே சமயத்தில் டார்ச் அடித்து ஒளிரச் செய்தது கண்ணைக் கவர்ந்தது. ஒருசிலர் ஆங்காங்கே கார்களில் பாடல்களை ஒளிபரப்பி குத்தாட்டம் போட்டனர். அதே போல் கோவில்கள் மற்றும் தேவாலயங்களும் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தன.

சென்னையில் நேற்றைய தினத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி 3700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 11 மணிக்கு மேல் சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓடியும், சாகசங்களை நிகழ்த்தியும் புத்தாண்டை கொண்டாடினர். முன்னதாக சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்திருந்தனர். இந்நிலையில் காவலர்களின் கண்காணிப்பையும் மீறி சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 1 ஜன 2018