மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ஆளுநர்!

எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ஆளுநர்!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையை, நாளை (டிசம்பர் 2) திறந்து வைக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர் வரிசையில், இன்று தஞ்சாவூர் செல்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித். அங்கு தென்னகப் பண்பாட்டு மையத்தில் நடைபெறும் சலங்கை நாதம் நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் பங்களிப்புடன் எம்ஜிஆரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. சுமார் 7 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இச்சிலை வெண்கலத்தால் ஆனது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவிய எம்ஜிஆருக்கு நன்றி செலுத்தும் விதமாக, இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் எம்ஜிஆர் சிலையை, ஆளுநர் புரோகித் நாளை திறந்துவைக்கிறார். இதையடுத்து, பாரதரத்னா எம்ஜிஆர் – பன்முகப்பார்வை எனும் நூலினை வெளியிட்டுப் பேசுகிறார். இந்நூலை, பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்கள் எழுதித் தொகுத்திருக்கிறார்கள். இந்த விழாவில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, பாண்டியராஜன் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். ஆனால், தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, நாளை காலையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கிறார் ஆளுநர். மாலையில் தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்துகொள்கிறார். மாலை 3.30 முதல் 5.30 வரை, தஞ்சை விருந்தினர் மாளிகையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொள்கிறார்.

தஞ்சாவூருக்கு ஆளுநர் வருவதை எதிர்த்து, எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில சுயாட்சி அமைப்புக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக, சில அமைப்புகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இதனால், தஞ்சாவூரில் ஆளுநர் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 1 ஜன 2018