இரு வெவ்வேறு இடங்களில் விபத்து!

தமிழகத்தில் இரு வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தும், 33 பேருக்கும் மேற்பட்டோர் காயமும் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேராக மோதியதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூரின் புதுப்பேட்டையில் சாலையில் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று வளைவில் திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 22 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்குச் சுற்றுலா சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.