மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

கௌதம் - தனுஷ்: நியூ இயர் ஸ்பெஷல்!

கௌதம் - தனுஷ்: நியூ இயர் ஸ்பெஷல்!

தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல் ஒன்றின் வீடியோ வெளியாகியுள்ளது.

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’, தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இதில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துவருகிறார். இயக்குநர் செந்தில் வீராசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ பி.மதனுடன் இணைந்து கெளதம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து வருகிறார். தர்புகா சிவா இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா – ஜோமன்.டி.ஜான் ஒளிப்பதிவு செய்கின்றனர். சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், ‘மறுவார்த்தை’ ‘நான் பிழைப்பேனோ’ ஆகிய இரு பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் படப்பிடிப்பு முடிவடையும் உள்ள நிலையில் தற்போது, படத்தில் இடம்பெறும் ‘விசிறி’ பாடலின் வீடியோவை புத்தாண்டு ஸ்பெஷலாக கெளதம் மேனன் வெளியிட்டுள்ளார். விரைவில் படத்தின் டிரெய்லர், வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 1 ஜன 2018