மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

தடுமாறிய வாட்ஸ்ஆப்!

தடுமாறிய வாட்ஸ்ஆப்!

புத்தாண்டு பிறந்ததும் நேற்று நள்ளிரவு வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்பிய பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

புத்தாண்டை முன்னிட்டு வாட்ஸ் அப் சேவை 30 நிமிடம் வரை முடங்கியதால் மக்கள் ட்விட்டரில் வாழ்த்து செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர். வருடத்தின் முதல் நாளே வாட்ஸ் அப் சேவை சிறிது நேரம் முடங்கி, மக்களைச் சிரமத்தில் ஆழ்த்தியது.

புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்தியாவின் பல்வேறு முக்கிய இடங்களில் மக்கள் ஒன்றுகூடி ஆங்காங்கே வாண வேடிக்கைகள் நிகழ்த்தி, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். அந்தச் சமயத்தில் வாட்ஸ் அப்பில் தங்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்துக்களை அனுப்ப முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இது குறித்து ஏஎன்ஐ ஊடகம் தனது ட்விட்டரில், "நேற்று நள்ளிரவில் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, வாட்ஸ் அப் சேவை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சுமார் அரை மணி நேரம் முடங்கியது. அரை மணி நேரத்துக்குப் பிறகு நிலைமை ஓரளவு சீரடைந்தது." என்று கூறியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமானது வாட்ஸ் அப், உலகம் முழுவதிலும் எளிதில் தொடர்பு கொள்ளும் சமூக வலைதளமாக விளங்கி வருகிறது. ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதம் உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாட்ஸ் அப் சேவை செயல்படாமல் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 1 ஜன 2018