பெண் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம்!

பெண் கல்வி உதவித்தொகை பெற ஜனவரி 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2005 -06ஆம் கல்வி ஆண்டு முதல், பெண் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு, யுஜிசி கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது. முதுநிலை படிப்பில் சேரும் மாணவியருக்கு, இந்திரா காந்தி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, மாணவிகள் மாதம் 3,100 ரூபாய் வீதம், 20 மாதங்கள் உதவித்தொகை பெறலாம்.தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவிகளுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படாது. உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் வேலையற்றவராக இருக்க வேண்டும். தொழிற்கல்வி அல்லாத படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவிகள் ஜனவரி 31ஆம் தேதிக்குள், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.