மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

பாஜகவில் இணைந்த இஷ்ரத்

பாஜகவில் இணைந்த இஷ்ரத்

முத்தலாக் வழக்கத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 5 பேரில் ஒருவரான இஷ்ரத் ஜகான் என்ற பெண் பாஜகவில் இணைந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் முத்தலாக் முறைக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. இதற்கு மாற்றான வழிமுறைகள் குறித்தும், புதிய சட்டம் இயற்றுவது பற்றியும் மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து, தற்போது நடைபெற்றுவரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் முத்தலாக்குக்குத் தடை விதித்து, மக்களவையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் நாடெங்கும் விவாதங்கள் நடந்துவருகின்றன. இந்த மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், முத்தலாக் எதிர்ப்பு வழக்கினைத் தொடுத்த 5 மனுதாரர்களில் ஒருவரான இஷ்ரத் ஜகான், கடந்த வாரம் பாஜகவில் இணைந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஹவுரா பாஜக அலுவலகத்தில், இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அந்த வட்டாரத்திலுள்ள பாஜகவினர், இதனைக் கொண்டாடியுள்ளனர். அம்மாநில பாஜக செயலர் சயந்தன் பாசு, இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்காள பாஜக தலைவரான திலீப் கோஷ், தான் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து வருவதாகவும், இஷ்ரத் பாஜகவில் இணைந்தது தற்போதுதான் தனக்குத் தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விரைவில், இஷ்ரத் ஜகானைச் சிறப்பிக்கும் விதமாக விழாவொன்று ஏற்பாடு செய்யப்படும் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஷ்ரத் ஜகானின் கணவர் துபாயில் வசித்துவருகிறார். 2014ஆம் ஆண்டு, இவர் போன் மூலம் முத்தலாக் சொல்லி விவாகரத்து பெற்றார். இதனை எதிர்த்து, நீதிமன்றத்தை நாடினார் இஷ்ரத்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 1 ஜன 2018