மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

இரட்டை வேடத்தில் அருண் விஜய்

இரட்டை வேடத்தில் அருண் விஜய்

தனது திரைப்பயணத்தில் முதன்முறையாக நடிகர் அருண் விஜய் இரட்டை வேடம் ஏற்று நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கும் தடம் படத்தில் நடித்து வரும் அருண் விஜய் தனது கதாபாத்திரம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். “என் திரைப்பயணத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிப்பதால மிகவும் உற்சாகமாக உள்ளேன். உருவத்தில் இரு வேடங்களுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. ஆனால் கதாபாத்திரத்தில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கவின் என்ற கதாபாத்திரம் ஆர்க்கிடெக்ட்டாகவும், எழில் என்ற மற்றொரு கதாபாத்திரம் வட சென்னையைச் சேர்ந்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

ரொமாண்டிக் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்த படத்தின் கதை குறித்து பேசிய அருண், “உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. பல்வேறு திருப்பங்களுடன் பார்வையாளர்களை இறுதிவரை ரசிக்க வைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு பாடல்காட்சி மட்டும் மீதம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

திங்கள் 1 ஜன 2018