மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்துக்கு அழைப்பு!

உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்துக்கு அழைப்பு!

உலக வர்த்தகக் கூட்டமைப்பில் உள்ள ஒப்பந்தங்களைப் புதுப்பிக்க கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், "வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் உள்ள வர்த்தகத் துறை அமைச்சர்களுக்கு உலக வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும்" என்றார்.

உலக வர்த்தகக் கூட்டமைப்பில் போடப்பட்டுள்ள சில ஒப்பந்தங்களால் இந்தியச் சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கினால், உள்நாட்டு வர்த்தகர்கள் போதிய சந்தை வாய்ப்பின்றி முடங்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் சில பன்னாட்டு வர்த்தகக் கொள்கைகளில் குறிப்பாக வேளாண் கொள்கைகள் குறித்து முக்கிய சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென இந்திய அரசுக்கு உள்நாட்டு வர்த்தகர்களும், அரசியல் கட்சியினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 1 ஜன 2018